SuperTopAds

யானை தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
யானை தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தரம் 2இல் கல்வி பயின்று வந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

காட்டு யானையின் தாக்குதலால் பலத்த காயமடைந்த சிறுமியும் அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பாடசாலை விடுமுறையான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு தந்தையும் மகளும் இலக்காகியுள்ளார். 

அதனை அடுத்து ஊரவர்கள் இருவரையும் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார். 

Radio