SuperTopAds

இரு குழுக்கள் இடையில் மோதல் - ஒருவர் படுகொலை

ஆசிரியர் - Editor II
இரு குழுக்கள் இடையில் மோதல் - ஒருவர் படுகொலை

கொழும்பு, கல்கிசை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஒருவர்  உயிரிழந்துள்ளார். 

அங்குலான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். 

இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

காயமடைந்தவர்களில் ஒருவர் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.  

கொலை சந்தேக நபர்கள்  பிரதேசத்திலிருந்து தப்பி சென்ற நிலையில் அவர்களைக் கைது செய்ய பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio