கடந்த 3 வருடங்களில் 20,000 மாணவர்கள் இடைவிலகல்

கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகினர் என கல்வி உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பாக அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
நாளாந்தம் பாடசாலை நேரத்தில் 50 வீத மாணவர்களே வகுப்பறையில் இருக்கின்றனர். அடுத்த வருடத்தில் தரம் ஒன்றுக்கும் தரம் 6க்கும் புதிய பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் புதிய இலக்குகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.




