IMF இல் இருந்து கீதா கோபிநாத் ராஜினாமா!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
கீதா கோபிநாத் ஓர் இந்திய-அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார் கீதா கோபிநாத் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.
கீதா கோபிநாத் , முதல் கிரகரி மற்றும் ஆனியா கோஃபி பொருளாதாரப் பேராசிரியராகப் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




