இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ: 5 பேர் உயிரிழப்பு, 284 பேர் மீட்பு

இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலான KM Barcelona 5, எனும் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 284 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
Talaud தீவுகளிலிருந்து North Sulawesi-யில் உள்ள Manado துறைமுகம் நோக்கி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கப்பல் பயணிக்கும்போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் போது, பயணிகள் கடலுக்குள் குதித்து தங்களை காப்பாற்ற முயற்சித்தனர்.
மீட்பு பணிகளில் கடற்படை, தேசிய தேடல் மற்றும் மீட்பு அமைப்பு, கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.








