கன்னி உரையில் கண்டனத்தை தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர்

கன்னி உரையில் கண்டனத்தை தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர்
தனது பிரதேச அபிவிருத்திக்கு உரிய ஒதுக்கீட்டை சபை செயலாளர் ஒதுக்காமல் தட்டிக்கழிப்பதாக குற்றஞ்சாட்டியதுடன் எதிர்காலத்தில் இவ்வாறு தொடரும் பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அப்துல் மஜீட் ஜாஹீர் தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் 1 ஆவது மாதாந்த சபைக்கூட்டம் இன்று(16) சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் ஆரம்பித்த வேளை தனது கன்னியுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
தனது மாளிகைக்காடு பிரதேசத்தின் அபிவிருத்தியில் வள ஒதுக்கீடு மற்றும் பங்கீட்டில் சபைச்செயலாளராக செயற்பட்டவர் பாரபட்சமாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் இவ்வாறான நிலை தொடர்ந்தால் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு வழங்கப்படுவதுடன் மக்களை திரட்டி போராட வேண்டி ஏற்படும் என அவர் கடும் தொனியில் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உப தவிசாளராக செயற்பட்ட அப்துல் மஜீட் ஜாஹீர்பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மாளிகைக்காடு மக்களுக்காக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கூட்ட அமர்வில் பல்வேறு விடங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.










