க.பொ.த. (சா/த) பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை வலயத்தில் ஸாஹிரா கல்லூரிக்கு 8வது இடம்

க.பொ.த. (சா/த) பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை வலயத்தில் ஸாஹிரா கல்லூரிக்கு 8வது இடம்
அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா கல்லூரி குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்து, கல்முனை கல்வி வலயத்தில் 8வது இடத்தைப் பெற்றுள்ளது. இப்பாடசாலை 79.3% உயர்தர தகுதி வீதத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு 18வது இடத்தைப் பெற்று 77.0% உயர் தர தகுதி வீதத்தை அடைந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். உயர் தரத்துக்கான தகுதி வீதத்தில் ஏற்பட்டுள்ள இந்த 2.3% அதிகரிப்பு இப் பாடசாலையின் நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட பாடவிதான அமுலாக்கத்தின் நேர்மறையான தாக்கத்தை கோடிட்டுக் காட்டுகின்றது.
இந்த மகத்தான சாதனைக்காக இப் பாடசாலை சமூகம் அதிபர் திரு. எம்.ஐ. ஜாபிர் (SLEAS) அவர்களுக்கும் அவர்தம் அர்ப்பணிப்புள்ள ஆளணியினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. கல்முனை கல்வி வலயத்தில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்த ஒரேயொரு ஆண்கள் பாடசாலை ஸாஹிரா கல்லூரியே என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஒரு ஆண்கள் பாடசாலை என்ற வகையில், இந்த குறிப்பிடத்தக்க வெற்றி ஒரு சாதனையாகக் கருதப்படுவதுடன் இத்தகைய சவாலான பணியின் தன்மையையும், பாடசாலையின் சிறப்பான முயற்சிகளையும் எடுத்துக்காட்டுகிறது.







