SuperTopAds

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் - சந்தேக நபர்கள் இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை

ஆசிரியர் - Editor III
ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் - சந்தேக நபர்கள் இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல் - சந்தேக நபர்கள்  இருவருக்கு  தலா 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை 

  ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யுமாறு அக்கரைப்பற்று  நீதிமன்ற நீதிவான்  ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.

ஊடகவியலாளர் மீது   தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்களான அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசுர் உட்பட மூவர் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று (15) காலை அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று  நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போதே நீதிபதி சந்தேகநபர்களான றியா மசுர் உட்பட இருவரையும் தலா 50,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுதலை செய்தார்.

அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி மீண்டும் அழைக்கப்பட உள்ளது.

நாம் ஊடகர் பேரவையின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அட்டாளைச்சேனையை சேர்ந்த யூ .எல். மப்றூக் கடந்த 02 ந் திகதி அட்டாளைச்சேனையில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானார். 

இது தொடர்பில் அக்கரைப்பற்று போலீஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் யூ எல் மப்றூக் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து போலீசார் அதுபற்றி அக்கரைப்பற்று  நீதிமன்ற நீதிவான் நீதிமன்றத்திற்கு B அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிவான், சந்தேகம் நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவு  பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio