ஹெலியில் தப்பிய கொள்ளையர்தலைவன்!.... வெடிமருந்து வாகனத்தில்!! பரிஸில் அதிர்ச்சி
பரிஸ் சார்சல் பகுதியில் வெடிமருந்து வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் குறித்து இன்றுகாலை (25 07 2018) ஒரு செய்தியை வழங்கியிருந்தோம் அல்லவா. இப்போது இந்த விடயத்தில் புதிய அதிர்சிகர செய்தி ஒன்று கிட்டியுள்ளது
சார்சல் வணிக அங்காடி தொகுதி வாகனத்தரிப்பிடத்தில் இந்த வெடிமருந்து வாகனத்தை விட்டுவிட்டு ஒடியவர்களில் ஒருவர் இந்த மாத முற்பகுதியில் பரிஸ் சிறை ஒன்றில் இருந்து உலங்குவானூர்தி மூலம் தப்பிச்சென்ற றடொவன் பைத் என தெரியவருகிறது.
கடந்த முதலாம் திகதி திகிலூட்டும் ஹொலிவூட் திரைப்படங்களை விஞ்சும்வகையில் சிறைமுற்றப்பகுதியில் உலங்குவானூர்த்தியை தரையிறங்கிய றடொவன் பைத்தின் கூட்டாளிகள். அதில் அவரை ஏற்றிய பின்னர் தப்பிச்சென்றனர்.
சுமார் 50 கிலோமீற்றர் தூரத்தை வான் மார்க்கமாக தாண்டிய இந்த குழு பரிசின் புறநகரப்பகுதியான கோணேசில் உலங்கு வானூர்தியை தரையிறக்கியது.
அதன் பின்னர் தாம் தப்பிவந்த உலங்குவானூர்திக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து இன்னொரு வாகனம் ஒன்றில் தப்பிச்சென்றனர். இன்றுவரை காவற்துறையினர் அவரை சல்லடை போட்டு தேடிவந்தபோதும் அகப்படவில்லை.
இந்த நிலையில் சார்சலுக்கு அருகே நேற்று மாலை வீதிச்சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் சந்தேகத்துக்கு இடமான ரெனோ லகுனா ரகத்தை சேர்ந்த வானம் ஒன்றை எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வைத்து சோதனையிட முனைந்தனர்.
ஆயினும் அந்தவாகனம் அவர்களிடமிருந்து தப்பித்து வேகமாக சார்சல் பகுதியை நோக்கி சென்றுவிட்டது. அந்த வாகனத்தில் சாரதியுடன் வேறு ஒரு நபரும் இருந்திருக்கிறார்.
பின்னர் இந்தவாகனம் வெடிமருந்து கொள்கலன்களுடன் மீட்க்கப்பட்டது. இதனையடுத்து வாகனத்தை கைவிட்டுவிட்டு தப்பியோடிய இருந்த இருவரையும் கண்காணிப்;பு கமெரா பதிவுகளின் மூலம் ஆய்வுசெய்தபோது அவர்களில் ஒருவர்
சிறையில் இருந்து தப்பிச்சென்ற றடொவன் பைத்தின் சாயலில் இருந்ததால் அவர் தான் இந்த வாகனத்தில் இருந்ததாக காவற்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த வாகனத்தில் காணப்படும் மனித மரபணு அடையாள பதிவுகள் சேகரிக்கபட்டு ஏற்கனவே உள்ள றடொவன் பைத்தின் மரபணுவுடன் சோதனை செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இரண்டு மரபணுமாதிரிகளும் ஒத்துப்போனால் தப்பியோடிய கொள்ளையர்தலைவன் சார்சலில் தான் மறைந்திருப்பதாக சந்தோகம் உறுதிப்படுத்தப்படும் என பிரெஞ்சுகாவற்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.