SuperTopAds

கோட்ட மட்ட வகுப்பறை கவின்களைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கேடயமும் சான்றுதலும் வழங்கல் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
கோட்ட மட்ட வகுப்பறை கவின்களைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கேடயமும் சான்றுதலும் வழங்கல் நிகழ்வு

கோட்ட மட்ட வகுப்பறை கவின்களைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கேடயமும் சான்றுதலும் வழங்கல் நிகழ்வு 

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள58 பாடசாலைகளில் வகுப்பறைகளை மாணவர்களின் கற்றல் சூழலுக்கு ஏற்ற வகையில் கவின் கலை பேணி உயிரோட்டமுள்ள வகுப்பறையாகப் பேணி வருகின்ற முதன்மைநிலை ஒன்றுக்கான போட்டியில பாடசாலைகளுக்கு இடையிலான கோட்டமட்ட போட்டியில் வெற்றி ஈட்டிய பாடசாலைகளுக்கு கேடயமும் சான்றுதலும் வழங்கும் நிகழ்வு 2025 7.4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வலயக்கல்வி பணிப்பாளர் மதிப்புக்குரிய எம் எஸ் சஹூதுல் நஜீம் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கல்முனை கமு/கமு/அஸ்-ஸூஹறா வித்தியாலயம்  கல்முனை கோட்ட பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பறை முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது. இதற்கான சான்றறுதழையும் கேடயத்தையும் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா உரிய செயற்பாடுகளில் அற்பணிப்புடன் செயல்பட்ட தரம் ஒன்று ஆசிரியை எம்.எச்  .எஸ்.றஹானா பெற்றுக்கொண்டார்.  இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாடசாலை அதிபர், உதவி அதிபர் ஆசிரியர் கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரையும்  பெற்றோர்கள்,சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள,கலவி அதிகாரிகள் அனைவரையும் பாடசாலையின்    அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு,பழையமாணவர்கள் ,நலன்விரும்பிகள்   பாராட்டுகின்றார்கள்  .

இன்று இடம்பெற்ற காலை ஆராதனையில் பிரதம அதிதியாக சேவைக்கால ஆசிய ஆலோசகரும் பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் இணைப்பாளருமான ரஹ்மான் சேர் அவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டியில் முதலாம் இடத்தை பெற்றமைக்கான வெற்றிக்கேடயம் அதிபரிடம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆசிரியை எம்எச்.எஸ். றஹானா அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்எச். ஹசினா ஆகியோரும்  கௌரவிக்கப்பட்டனர் அடுத்து எமது பாடசாலையில் இடம் பெற்ற முஹர்ரம் நிகழ்ச்சிக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஆங்கில ,சிங்கள, தமிழ் சொல்வளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குமான அன்பளிப்பு பொருட்களையும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகருமான றஹ்மான் சேர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது .எமது பாடசாலையில் ஆங்கில கல்வியை மேலும் வலுவூட்டும்வகையில்தரம்1 ,2 ,3 ,4 ,5 ஆகிய வகுப்புகளுக்கான Reading  and Spelling Contest- 2025 காண word List book வெளியீடும் இடம்பெற்றது.

Radio