SuperTopAds

கச்சதீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை!

ஆசிரியர் - Admin
கச்சதீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை!

கச்சதீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கச்சத்தீவு தொடர்பில், இந்தியாவில் ஏற்படும் முரண்பாடுகள் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இராஜதந்திர வழிகள் திறந்தே உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.     

எனினும், இலங்கை ஒருபோதும் கச்சத்தீவை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது என்பது உறுதி. இது சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்டது என தெரிவித்துள்ளார்.