பருத்தித்துறையில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து- 21 பேர் படுகாயம்!

பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து,சிலாபம், தெதுரு ஓயா அருகே, வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில், ஓட்டுநர் உட்பட 21 பேர் காயமடைந்து, சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த பேருந்து, திடீரென பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து தெதுரு ஓயாவிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்களின் மிகுந்த முயற்சிக்குப் பின்னர் காயமடைந்தவர்கள் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.