SuperTopAds

தொடரும் அட்டூழியங்கள் - மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

ஆசிரியர் - Editor II
தொடரும் அட்டூழியங்கள் - மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

மெக்சிகோவில் பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 

பெங்களூருவில் பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் கடந்த வருடம்  செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சமீபத்தில் "ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில்‘கேப்பிட்டல் கெசட்’  எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தில் மர்ம நபர்களால் 5 செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் ரூபன் பாட் என்பவர்  இணைய தள பத்திரிகையை நடத்தி வந்தார். நேற்று அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் ரூபனை சரமாரியாக சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

 

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.