விமான நிறுவனத்தில் இணையத் தாக்குதல்

ஹவாயன் ஏர்லைன்ஸின் (Hawaiian Airlines) சில இணையச் செயல்முறைகள் ஊடுருவப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமானப் பயணங்கள் வழக்கம்போல் தொடர்வதாகவும் அது சொன்னது.
ஊடுருவல் எப்படி நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை.
இணையக் கட்டமைப்பை முடக்கி வைத்து, பணத்தை மிரட்டி வாங்க முயற்சி செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நிலைமையைக் கண்காணிப்பதாக அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் கூறியுள்ளது.
News : Reuters




