SuperTopAds

நாளை விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா: உறுதி செய்த நாசா!

ஆசிரியர் - Admin
நாளை விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா: உறுதி செய்த நாசா!

இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா, Axiom Space Ax-4 திட்டத்தின் ஒரு பகுதியாக, நாளை (ஜூன் 25) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை தொடங்க உள்ளார். 

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கூட்டு முயற்சியான இத்திட்டத்தில், சுக்லாவுடன் மேலும் மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்கின்றனர்.     

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தப் பயணம், பல முறை ஒத்திவைக்கப்பட்டது./// தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக முன்னதாக ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது.

கடைசியாக ஜூன் 19 அன்று ஏற்பட்ட தாமதத்துக்கு தொழில்நுட்ப கோளாறுகளே காரணம் என நாசா தெரிவித்தது.

இருப்பினும், Axiom-4 திட்டம் நாளை (ஜூன் 25) புளோரிடாவில் இருந்து ஏவப்படும் என நாசா தற்போது உறுதி செய்துள்ளது.

இந்தியாவின் சுபான்ஷு சுக்லா(Shubhanshu Shukla) உட்பட நான்கு விண்வெளி வீரர்களும் இறுதியாகத் தங்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விண்வெளிப் பயணத்தை தொடங்க உள்ளனர்.