SuperTopAds

பிரித்தானியாவிற்கு அருகில் அணு ஆயுத தளங்களை மேம்படுத்திய ரஷ்யா!

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவிற்கு அருகில் அணு ஆயுத தளங்களை மேம்படுத்திய ரஷ்யா!

பிரித்தானியாவிற்கு மிக அருகில் உள்ள ரஷ்யாவின் அணு ஆயுத தளங்கள் பெரிதும் புதுப்பிக்கப்பட்டுள்ளன என புதிய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பால்டிக் கடலோரத்தில் உள்ள தனது மேற்கத்திய பகுதி கலினின்கிராடில் (Kaliningrad) 100-க்கும் மேற்பட்ட அணு ஏவுகணைகள் வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.     

ஸ்வீடனின் SVT ஒளிபரப்புக் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கலினின்கிராட் மற்றும் பல முக்கிய தளங்களில் புதிய பாதுகாப்பு கட்டடங்கள், ரயில்வே லாஜிஸ்டிக்ஸ் வசதிகள், மற்றும் கதிர்வீச்சு கண்காணிப்பு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Iskander-M மற்றும் 9M729 (SSC-8) குறுக்கு ஏவுகணைகள் இங்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பிரித்தானியாவை தாக்கும் அளவுக்கு அதிக தூரம் செல்லும் திறன் கொண்டவை.

பெலாரஸில் உள்ள Asipovichy மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள Novaya Zemlya ஆகியவை அணுசக்தி சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வரலாற்று தளங்கள் ஆகும்.

இங்கு தற்போது புதிய கட்டிடங்கள் உருவாகி வருவதால், ரஷ்யா மீண்டும் அணு சோதனைக்கு தயாராகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பனிப்போர் காலத்தில் பரிசோதிக்கப்பட்ட "Tsar Bomb" எனும் மிக பாரிய அணுகுண்டு இத்தளத்தில் 1961ஆம் ஆண்டு வெடிக்கவிடப்பட்டது. அதற்குப் பிறகு, தற்போது இங்கு ரஷ்ய இராணுவ அதிகாரிகள் நேரில் வருகை தந்துள்ள தகவல்களும் வெளிவந்துள்ளன.

உலகளாவிய பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இது புதிய அணு மோதல் பீதி ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.