SuperTopAds

வரலாற்று ஆவணப் பட வெளியீடு

ஆசிரியர் - Editor III
வரலாற்று ஆவணப் பட வெளியீடு

வரலாற்று ஆவணப் பட வெளியீடு

எழுநா சமூக விழிப்புணர்வு ஆவணப்படுத்தல் குழுமம் ஏற்பாடு செய்த இலங்கையில் நடந்த யுத்த காலங்களில் தமிழர்கள் எதிர் நோக்கிய இன்னல்கள் தொடர்பிலும் விசேடமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை தொடர்பிலும் அவர்களது உறவுகளுடைய மனவெளிப்பாடுகள் மற்றும் அவை தொடர்பான சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களின் கருத்துக்கள் அடங்கிய ஆவண படம் வடக்கு கிழக்கு எங்குமே பொதுமக்கள் மத்தியில் திரையிடப்பட்டு பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிகின்ற நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

அந்த வகையில் செவ்வாய்க்கிழமை (17)  அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று AWF  அமைப்பின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த ஆவண படத்தை பார்வையிட்டதோடு தமது கருத்துக்களையும் வெளியிட்டிருந்தனர்.