SuperTopAds

ஈரானில் ரகசியமாக தரையிறங்கிய சீன விமானங்கள்!

ஆசிரியர் - Admin
ஈரானில் ரகசியமாக தரையிறங்கிய சீன விமானங்கள்!

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஈரான் தனது வான்வெளி பரப்பை முற்றிலுமாக மூடி உள்ளது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் சீனாவின் சரக்கு விமானங்கள் ஈரானில் ரகசியமாக தரையிறங்கி உள்ளது. இதனால் சீனாவில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.     

இஸ்ரேல் - ஈரான் இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றன. இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிற நாடுகளின் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் ஈரான் தனது வான்வெளி பரப்பை மூடியுள்ளது.

இதன்மூலம் தங்களின் வான்வெளி பரப்புக்குள் நுழையும் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தலாம். இப்படியான சூழலில் தான் தற்போது சீனாவின் சரக்கு விமானங்கள் ஈரானில் தரையிறங்கி உள்ளது.

இந்த விமானங்கள் ஈரான் வான் எல்லையில் நுழைந்தவுடன் டிரான்ஸ்பாண்டரை ஆஃப் செய்து பயணித்துள்ளது. இதுதான் விமானத்தின் நகர்வை கண்காணிக்க உதவும் எலக்ட்ரானிக்ஸ் டிவைசாகும்.

டிரான்ஸ்பாண்டரை ஆன் செய்து வைத்திருந்தால் மட்டுமே அந்த விமானத்தின் நகர்வை கண்டுபிடிக்க முடியும். ஆனால் விமானத்தின் நகர்வை மறைக்க அது ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால் ரகசியமாக சீனா தனது விமானங்களை ஈரானில் தரையிறக்கி உள்ளது.அதேபோல் ஈரான் தனது வான்வெளி பரப்பை மூடிய நிலையில் சீனாவின் விமானம் அங்கு சென்றுள்ளது.

இது சீனா - ஈரான் இடையேயான ஒருங்கிணைப்பை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.