SuperTopAds

ஈரானின் புதிய உயர் ராணுவ தளபதி கொல்லப்பட்டார்: இஸ்ரேல் அறிவிப்பு!

ஆசிரியர் - Admin
ஈரானின் புதிய உயர் ராணுவ தளபதி கொல்லப்பட்டார்: இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் ஐஏஎஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று ஐடிஎஃப் ட்வீட் செய்தது.     

ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய ராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார்.

அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலால போரில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஈரானில், இதுவரை 224 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் இஸ்ரேலில், ஈரானின் பதிலடி தாக்குதல்களில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 592 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.