SuperTopAds

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் வதந்தியாம்

ஆசிரியர் - Editor II
வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் வதந்தியாம்

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இருப்பினும், திருகேஸ்வரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் 'கார்பன் டேட்டிங்' சோதனைகளுக்காக 'புளோரிடா'விற்கு அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Radio