SuperTopAds

இஸ்ரேல் - ஈரான் பதற்றம் குறித்து கனடியர்களுக்கு எச்சரிக்கை!

ஆசிரியர் - Admin
இஸ்ரேல் - ஈரான் பதற்றம் குறித்து கனடியர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் கனடியர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கும் கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.     

விமான சேவைகள் தடைப்படும் வாய்ப்பு உள்ளதால் பயண பாதிப்புகளுக்கு தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பயண எச்சரிக்கையில், கத்தார் உட்பட பல நாடுகளுக்கான பாதுகாப்பு நிலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

• இஸ்ரேல் – அனைத்து வகையான பயணத்தையும் தவிர்க்கவும்

• ஈரான் – அனைத்து வகையான பயணத்தையும் தவிர்க்கவும்

• ஜோர்டான் – அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்கவும் (சில பிராந்தியங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை)

• கத்தார் – மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் இன்றுவரை நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய கனடியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும், இதுவரை பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.