SuperTopAds

மருதமுனைக்கு சென்ற கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

ஆசிரியர் - Editor III
மருதமுனைக்கு சென்ற கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

 மருதமுனைக்கு சென்ற கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

கடமையின் போது  விடுதலைப்புலிகளின் தாக்குதலினால் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரது வீடு சென்று கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர   நலன் விசாரித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வசிக்கும்  குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த கால யுத்த நிலைமையின் போது மருதமுனை பகுதியில் வைத்து விடுதலைப்புலிகளின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தார்.

குறித்த தாக்குதலினால் இடுப்பு மற்றும் அதன் கீழ் இயங்காது பெரும் சிரமப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரது நலன் குறித்து ஆராய்வதற்காக இன்று  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  வீரசிங்க பங்குபற்றலுடன் கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர   நலன் விசாரித்துள்ளார்.

இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தரது விடயத்தில் அக்கறையுடன் நலன்களை கேட்டறிந்த கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனைத்து உதவிகளைம் செய்வதற்கு உரிய தரப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Radio