SuperTopAds

12 நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த பயணத்தடை இன்று முதல் அமுல்!

ஆசிரியர் - Admin
12 நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த பயணத்தடை இன்று முதல் அமுல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடை இன்று அமுலுக்கு வருகிறது. அதற்கமைய, ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ, கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.     

மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோங்கா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதி பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.