மண்டைதீவில் வீடொன்றில் திருட்டு - சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் மண்டைதீவு 6ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணமும், ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களும், நகைகளும் திருடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .