வெளிநாட்டில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த குட் பேட் அக்லி படமும் மாபெரும் வெற்றியை பெற்று தந்துள்ளது.
8 நாட்களை கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 208 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் ரூ. 125.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டில் GBU திரைப்படம் 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் வெளிநாட்டில் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த அஜித்தின் படமாக குட் பேட் அக்லி சாதனை படைத்துள்ளது.