ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் யு.எல்.அஸ்பர் ஜே.பி

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் யு.எல்.அஸ்பர் ஜே.பி
மலரும் இப் புனிதப்பெருநாள் இம்மண்ணில் அமைதியையும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் சுமந்து வரவேண்டுமென பிரார்த்தின்றேன்.சாதிஇ மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் எதிர்கொண்ட இக்கட்டான காலகட்டத்தை கடந்து நாட்டில் நல்லதொரு சூழல் உருவாகியுள்ள இவ்வேளையில் எமது சக முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளதையிட்டு நான் ஆனந்தமடைகின்றேன்.இம்முறை புனித ரமழான்இ நாட்டுக்கு விஷேடமாக சம்மாந்துறை மக்களுக்கு தேர்தல் ஒன்றினூடாக நல்ல தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. நாட்டு மக்களும் குறிப்பாக சம்மாந்துறை மக்களும் அவர்களுக்கான சிறந்த தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள் என முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையில் சுயேட்சைக்குழு- 3 இல் ரேடியோ சின்னத்தில் 2025 ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளருமான யு.எல்.அஸ்பர் ஜே.பி தெரிவித்துள்ளார்.





