இலங்கையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய அணுகுமுறையை நோக்கி செல்லவேண்டும் - சத்தியலிங்கம் எம்.பி. கோரிக்கை
இலங்கையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதியதொரு அணுகுமுறையை நோக்கி செல்ல வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் குழுநிலை விவாதத்தில் நேற்று கருத்துரைத்த அவர், இந்த விடயத்தை உலக சுகாதார ஸ்தாபனமும் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
சுகாதாரம் அபிவிருத்தியின் அளவு கோளாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.