பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்காமல் எமது இருப்பை பாதுகாக்க முன்வாருங்கள்-கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்
ஆசிரியர் - Editor III
பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்காமல் எமது இருப்பை பாதுகாக்க முன்வாருங்கள்-கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்
காரைதீவு மண் என்பது அழிவின் விளிம்பில் இருக்கின்றது.தேசிய கட்சிகள் காரைதீவு பிரதேச சபையினை இம்முறை தமிழர்கள் கைப்பற்றக்கூடாது என கூறி எம்மில் சிலரை மூளைச்சலவை செய்து தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுகின்றார்கள்.வடகிழக்கில் முதல் முதலாக திருவுளச்சீட்டின் ஊடாக காரைதீவு பிரதேச சபையினை தமிழரசுக்கட்சி கைப்பற்றியதை எல்லோரும் அறிவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளரும் இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை தலைமையிலான பிரதேச சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(30) விவேகானந்தா விளையாட்டுக் கழக மண்டபத்தில் நடைபெற்ற வேளை அங்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்க மெலம் கருத்து தெரிவிக்கையில்
உண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலவற்றை பேசி இருந்தாலும் எமது மண்ணுக்கு அவை மிகவும் பொருத்தமானவையாகும்.எமது காரைதீவு மண் என்பது அழிவின் விளிம்பில் இருக்கின்றது என்பதை அனைத்து பிரதேச வாழ் மக்கள் உணர்ந்து கொண்டு வாக்களிக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் இருக்கின்றீர்கள்.மொத்தமாக காரைதீவு பிரதேச சபையில் 7 வட்டாரங்கள் உள்ளடங்குகின்றன.தமிழர் பிரதேசங்கள் 4 வட்டாரங்களாகவும் 3 வட்டாரங்கள் இஸ்லாமியர்களின் வட்டாரங்களாகவும் காணப்படுகின்றன.இஸ்லாமியர்கள் அவர்கள் சார்ந்து வாக்குகளை அளிக்கின்றார்கள்.
தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்குகளை அளிக்கின்றார்கள்.ஆனால் இன்று சில தேசிய கட்சிகள் காரைதீவு பிரதேச சபையினை இம்முறை தமிழர்கள் கைப்பற்றக்கூடாது என கூறி எம்மில் சிலரை மூளைச்சலவை செய்து தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுகின்றார்கள்.வடகிழக்கில் முதல் முதலாக திருவுளச்சீட்டின் ஊடாக காரைதீவு பிரதேச சபையினை தமிழரசுக்கட்சி கைப்பற்றியதை எல்லோரும் அறிவோம்.எனவே தான் பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்காமல் எமது இருப்பை தக்கவைப்பதற்காக சரியான வழிகாட்டல்களை வழங்கி உரிய அரசியல் செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக வெற்றி பெற முடியும்.இல்லாவிடின் மரண வீடு முதல் இதர செயற்பாட்டிற்காக தமிழன் மண்டியிட வேண்டும்.62 வீதம் உள்ள நாங்கள் ஆட்சி அமைப்பதா? அல்லது மற்றவர்களுக்கு தாரை வார்ப்பதா என்பதை இதை காரைதீவு புத்திஜீவிகள் உள்ளம் சார்ந்து சிந்தித்து செயற்படாவிடின் வரலாற்று துரோகம் மற்றும் பிழைகளை விட்டவர்களாக மாற நேரிடும்.
சலுகைகள் ஆசை வார்த்தைகள் வேலைவாய்ப்புக்கள் என பொய் கூறி வருபவர்களை விரட்டி அடியுங்கள் எமக்கு தூய்மையான உண்மையாக எம் மண்ணை நாங்கள் ஆழ்வதற்கு நீங்கள் அனைவரும் வீட்டிற்கு வாக்களியுங்கள் என்றார்.
மேற்படி நிகழ்வு காரைதீவு இலங்கை தமிழரசு கட்சி கிளை செயலாளர் கதிர்காமத்தம்பி செல்வபிரகாஷ் தலைமை தாங்கியது டன் இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்