SuperTopAds

பொலிஸார் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா!

ஆசிரியர் - Admin
பொலிஸார் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா!

பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், போக்குவரத்துச் சட்டத்தை மீறியதாகவும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததற்காக எம்.பியின் வாகனம் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அர்ச்சுனா இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான வீடியோவில், எம்.பி, “நாங்கள் விஐபி இல்லையா? ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்று பாராளுமன்றத்திற்கு பயணிக்க எனக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்” என பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

போக்குவரத்துச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் கொண்டு வரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மத நல்லிணக்கத்தை தூண்டும் வகையில் எம்.பி ஏதேனும் கருத்து தெரிவித்தாரா என்பதைக் கண்டறியவும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.