SuperTopAds

மருதங்கேணி பொலிஸாரால் பிரபல ரவுடி சுற்றிவளைப்பு.!

ஆசிரியர் - Admin
மருதங்கேணி பொலிஸாரால் பிரபல ரவுடி சுற்றிவளைப்பு.!

வடமராட்சி குடத்தனை மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தருசு மணி நேற்று(4) இரவு மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மைலோ கம்பெனியின் சொத்துக்கள், ஆவணங்கள், தொலைபேசி உட்பட நிதிகளை கொள்ளையிட்ட சம்பவத்திலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக பொலிஸாருக்கு தண்ணி காட்டி வந்த நிலையில் நேற்று இரவு அதிரடியாக மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்ய சென்ற பொலிஸாரை தாக்கியதுடன் தப்பி ஓட முயன்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை மருதங்கேணி பொலிஸார் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.