SuperTopAds

சிறுமிக்கு ஆபாசக் காணொளி அனுப்பிய இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி.!

ஆசிரியர் - Admin
சிறுமிக்கு ஆபாசக் காணொளி அனுப்பிய இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி.!

பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(5) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் தந்திரிமலை இராணுவ முகாமிற்குட்பட்ட பதவி பராக்கிரமபுர பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சிறிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.