வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஜெகூவின் பதவி மீள பெறப்பட்டது!
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி மீளப் பெறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் மீளப்பெறப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.