வன்னியில் யசோதினி தனது வாக்கினை செலுத்தினார்
வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் யசோதினிஇன்றைய தினம் தனது வாக்கினை சங்கு சின்னம் 6ஆம் இலக்கத்தில் செலுத்தியுள்ளார்.
சனனாயக தமிழ் தேசியக் கூட்டணியில் தனது பூர்வீக கிராமமான வவுனியா கோவில் புளியங்குளம் வேலங்குளம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தி இருந்தார்
வாக்கைச் செலுத்திய பின் இவ்வாறு தெரிவித்தார்.
நான் பிறந்த கிராமத்தில் எனக்கு நான் வாக்களித்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது இந்த போர் முடிந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு எங்களுடைய மக்கள் மிகவும் பொருளாதார அரசியல் ரீதியாக ஏனைய அடிப்படை வசதிகள் ரீதியாக மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றார்கள்.
அந்த வகையில் எங்களுடைய மக்கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றம் ஒரு எழுச்சி ஒரு முன்னேற்றம் என்பதை தான் எதிர்பார்க்கின்றார்கள்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் எங்களுடைய மக்கள் வாக்குகளை அளித்து எங்களுடைய இருப்புகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்
இந்த பாராளுமன்ற தேர்தலிலே நாங்கள் வெற்றி பெறுவோம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.