SuperTopAds

புலி நீக்க அரசியலே இன்று தமிழரசு கட்சியில் நடக்கிறது..

ஆசிரியர் - Editor I
புலி நீக்க அரசியலே இன்று தமிழரசு கட்சியில் நடக்கிறது..

சூழ்ச்சியால் தோல்வியடைந்தேன்.   உங்களுக்கு உங்கள் பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதி வேண்டுமா என்பதை நீங்களே முடிவெடுங்கள்.

அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

விவசாயம், கல்வி, விளையாட்டு என்பவற்றில் நான் கவனம் செலுத்தவுள்ளேன். விவசாயத்தில் கடற்றொழிலும் வரும். வேலைவாய்ப்பு, சுயதொழில் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்.

பொருளாதார வளர்ச்சிக்கு என்ன என்ன செய்யமுடியுமோ அதனை நான் செய்வதுடன் சமாந்தரமாக இனப்பிரச்சினை மற்றும் அதிகாரப் பகிர்விலும் கவனம் செலுத்துவேன்.

நான் தற்போது கட்சியில் இல்லை. ஒற்றுமையை காப்போம் காப்போம் என்று சொன்னவர் தற்போது விலகிவிட்டார். அங்கு வேற்றுமை தான் உள்ளது. தமிழ் அரசுக் கட்சியில் தனக்கு விருப்பு வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் சுமந்திரன் தனது ஆட்களை இறக்கியுள்ளார்.

நான் பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. ஆனால் பல வேலைத்திட்டங்களை செய்துள்ளேன். தங்கள் பதவியை தக்கவைக்க தற்போது வேட்பாளர்கள் வருகின்றனர். இளைஞர்களே சிந்தியுங்கள்.

மாவை சேனாதிராஜா பதவியை ராஜினாமா செய்து விலகிவிட்டார். தமிழ் அரசுக் கட்சியில் தேசியம் இல்லாமல் போய் புலி நீக்க அரசியல் பேசப்படுகிறது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதல பாதாளத்திற்கு போய்விட்டது. நாம் பதவிக்காக விட்டுவிட்டு வரவில்லை.

அருகதையில்லாத வலி தெரியாதவர் எம்மை விமர்சிக்கிறார்.

இது சோதனைக்காலம். அடித்துச் சொல்கிறேன். எவரும் வரமாட்டார்கள். உங்கள் நிலம் அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால் நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்லவேண்டும். - என்றார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு என்ற பெயரில் மாம்பழ சின்னத்தில்

சுயேட்சையாக  சரவணபவன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.