விளையாடும் போது மைதானத்தில் உயிரிழந்த வீரர்: கதறியழுத சக வீரர்கள்!
பிரிட்டனைச் சேர்ந்த ரக்பி வீரர் விளையாட்டு மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
யார்க்ஷயர் ஆண்கள் லீக் ரக்பி போட்டி Heworth இல் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டில் Birkenshaw Bluedogs என்ற அணிக்காக மேக்ஸ் பிளாகிலி (வயது 32) விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
இதுகுறித்து மேக்ஸின் நண்பர் லீ கூறியதாவது;
அவருக்கு பிடித்ததைத் தான் மேக்ஸ் எப்போதும் செய்வார். அவரை நான் மிஸ் பண்ணுகிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.