பிரச்சார பணிகளின்போது மக்களின் ஆதரவை அறிகிறோம் - மணிவண்ணன்..
தமிழ் மக்கள் மாற்றத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில் நாம் ஒரு பிரகாசமான வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.நகர் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போதே ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.நகர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டோம். பிரசுரங்களை விநியோகிக்கும் போது மக்களின் கருத்துக்களை கேட்கும் போது, அனைவரும் மாற்றம் ஒன்றினையே விரும்புவதாக தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துக்கள் படி பிரகாசமான ஒரு வெற்றியை நோக்கி நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.