யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்த்தர் மரணம்...
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார்.
இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு கடந்த 21 ஆம் திகதி சுகயீனம் அடைந்ததை அடுத்து மறுநாள் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த நபருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சலின் காரணமாக மரணம் சம்பவித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.