இலங்கை மேற்கிந்தியாவிற்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு

ஆசிரியர் - Admin
இலங்கை மேற்கிந்தியாவிற்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி தற்சமயம் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள்  அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Charith Asalanka அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றதுடன், Kamindu Mendis 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Romario Shepherd 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 180 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு