உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் அநீதிக்கு வாய்ப்பே கிடையாது அரசாங்கம் உறுதியளிப்பு..
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் போது எந்த அநீதியும் இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன,
விசாரணைகளின் போது அரசாங்கம் என்ற அடிப்படையில் எந்த அநீதியும் இடம்பெற அனுமதிக்கமாட்டோம்.
எவரையும் காப்பாற்ற மாட்டோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் பூர்த்தியானதும்விசாரணைகள் மற்றும் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து
அரசாங்கம் பொதுமக்களிற்கு முழுமையான விபரங்களை வெளியிடுவோம்.