யாழில் சிறப்பிக்கப்பட்ட கனடா – குரும்பசிட்டி நலன்புரிச் சபை வெள்ளிவிழா
கனடா- குரும்பசிட்டி நலன்புரிச் சபையின் வெள்ளிவிழா நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை(13) பிற்பகல்- 03 மணி முதல் யாழ். குரும்பசிட்டி ஆ.சி.நடராசா ஞாபகார்த்த பொது நூலக மண்டபத்தில் நிலையத்தலைவர் அ.யோகநாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டதுடன், வலி.வடக்குப் பிரதேசசபை உறுப்பினர் தங்கராசா, யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி யோ.நந்தகோபன், வலி.வடக்குப் பிரதேசசெயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் த.ரஜிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப்பொருட்கள், உடுபுடவைகள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, இந்த நிகழ்வில் விருந்தினர்கள், பயனாளிகள், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பொதுமக்கள், ஊரவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.