SuperTopAds

யாழில் இடம்பெற்ற LGBTQ நடைபவனிக்கு கீதநாத் கண்டனம்

ஆசிரியர் - Editor II
யாழில் இடம்பெற்ற LGBTQ நடைபவனிக்கு கீதநாத் கண்டனம்

மேலைத்தேய கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை எமது சிறுவர்கள் மீது திணிக்க முற்படும் ரகசிய குழுக்களால் பணம் வழங்கப்படும் ஓர் ரகசிய நிகழ்ச்சி நிரல் காணப்படுவதாக, சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை  நடை - 2025" எனும் தொனிப்பொருளில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது. அது தொடர்பில் கீதநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தனி நபர்களோ அமைப்புகளோ தமது உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியும் எனினும் அவர்கள் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை, குறிப்பாக புனிதத் தலங்களுக்கான இடங்களில் மதிக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

யாழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதுமான மற்றும் உலகளாவிய ரீதியிலான பக்தர்களின் புனிதத் தலமாக விளங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஓரினச் சேர்க்கை மற்றும் அது சார்ந்த தமது நம்பிக்கைகளை ஒரு குழு விளம்பரப்படுத்தும் செயல் அதிர்ச்சிகரமானதும் வெட்கக்கேடானாதுமாகும்.

 

இந்த செயற்பாடானது முழுக்க முழுக்க தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரான ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்பதுடன் குறித்த செயற்பாடுகளை அரங்கேற்றும் குழுக்களுக்கு மேலைத்தேய கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை எமது சிறுவர்கள் மீது திணிக்க முற்படும் ரகசிய குழுக்களால் பணம் வழங்கப்படும் ஓர் ரகசிய நிகழ்ச்சி நிரல் காணப்படுகிறது.

அண்மையில் நல்லூர் புனிதப் பிரதேசத்தில் மாமிச உணவுகளை விற்பனை செய்யும் ஓர் உணவகம் ஒன்றிற்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல்கொடுத்ததன் காரணமாக குறித்த உணவகம் சைவ உணவினை பரிமாறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.

எனினும் குறித்த  உணவகத்திற்கு எதிராக குரல் எழுப்பிய அனைவரும் தமிழ் கலாசாரம் சீரழிக்கப்படும் இவ்விவகாரத்தில் மெளனம் காப்பது வருத்தமளிக்கிறது.

குறித்த மேலைத்தேய கலாசார நடவடிக்கைகள் எமது கலாசார மற்றும் புனிதப் பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் தமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் இக்குழுவினரும் ஒரு சமூகத்தின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை மதிக்க வேண்டியது கட்டாயமாகும்.

இது போன்ற கலாசார சீரழிவு நடக்கும் பொழுது நாம் மௌனித்து இருக்க நாம் எந்த ஒரு அமைப்பிடமும் விலை போகவில்லை. தமிழ் கட்சிகள் இதனை கண்டிக்க தவறினால் எமது அடுத்த தலைமுறை சீர்கெட்டு விடும்.

உண்மையான மற்றும் உணர்வுபூர்வமான மாற்றுப்பாலினத்தவர்கள் வானவில் சமூகத்துடைய செயற்பாடுகளுக்கு அப்பால் இருந்துவருவதே நிதர்சனமாகும் எனும் நிலையில், இ‌‌ந்த சீர்கேட்டை கண்டிக்கத் தவறிவிட்டு உணவகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது அர்த்தமற்ற ஒரு செயற்பாடாகும் -  எனத் தெரிவித்துள்ளார்

//let deferredPrompt; // //window.addEventListener('beforeinstallprompt', function(event) { // // Prevent Chrome 67 and earlier from automatically showing the prompt // event.preventDefault(); // // Stash the event so it can be triggered later. // deferredPrompt = event; //}); // Installation must be done by a user gesture! Here, the button click /* if(btnAdd) { btnAdd.addEventListener('click', (e) => { // hide our user interface that shows our A2HS button btnAdd.style.display = 'none'; // Show the prompt deferredPrompt.prompt(); // Wait for the user to respond to the prompt deferredPrompt.userChoice .then((choiceResult) => { if (choiceResult.outcome === 'accepted') { console.log('User accepted the A2HS prompt'); } else { console.log('User dismissed the A2HS prompt'); } deferredPrompt = null; }); }); } */ //$('a.logo-link').append('
');