குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பிடித்ததால் காயமடைந்த மூதாட்டி பலி!

ஆசிரியர் - Editor I
குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பிடித்ததால் காயமடைந்த மூதாட்டி பலி!

குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பற்றியமையால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த நிக்லஸ்ப்பிள்ளை வல்லமரி (வயது 88) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டின் வெளியே குப்பி விளக்குடன் சென்ற போது, விளக்கின் தீ ஆடையில் பற்றிக்கொண்டது. 

அதனை அடுத்து வீட்டார் தீயை அணைத்து , மூதாட்டியை காப்பற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு