SuperTopAds

யாழ்.வடமராட்சி கிழக்கில் உள்ள கோவிலில் 7 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் உள்ள கோவிலில் 7 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்..

யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள நாகர்கோவில் வடக்கு முருகையா ஆலயத்தில் தற்போது திருவிழாவானது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் குறித்த ஆலயத்தின் 7ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இதில் மாம்பழத்திற்காக முருகப் பெருமானிற்கும் அவரது அண்ணனான கணபதிக்கும் மாம்பழத்திற்காக நடந்த கதையினை கூறி பின் அந்த மாம்பழத்தினை பக்தர்களுக்காக ஏலத்தில் விடுவார்கள்.

அப்படி நடக்கின்ற போது, இறைவன் அருள் பெற்றதாக நம்பப்படும் குறித்த அந்த மாம்பழம் ஒன்றினை

ஏழு இலட்சம் ரூபாவிற்கு பக்த அடியார் ஒருவர் வாங்கியுள்ளார்.

இதேவேளை கடந்த வருடமும் இவ்வாலயத்தின் மாம்பழத் திருவிழாவின் போது 2,50,000 ரூபாய்க்கு மாம்பழமானது ஏலத்தில் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.