யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் மரணம்..
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய முதியவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி வீட்டில் இருந்து திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை,
எதிரே வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்கு உள்ளானதில் முதியவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று , கடந்த 03ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை திடீரென சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.