SuperTopAds

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திய பின் ஜனாதிபதி ரணிலின் காலை நக்குவது ஏன்? பணப் பெட்டிகளுக்கா?

ஆசிரியர் - Editor I
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திய பின் ஜனாதிபதி ரணிலின் காலை நக்குவது ஏன்? பணப் பெட்டிகளுக்கா?

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம் சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில், நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் தமிழ் மக்களின் எதிர்பார்த்த கோரிக்கை அவர் ஊடாக பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. 

இந்த உருவாக்கத்தின் பின்னணியில் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் பலர் பங்காற்றிய நிலையில் அவர்களுடன் இணைந்து பொதுக் கட்டமைப்பில் கையப்பமிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் ஓடிச் சென்று பேசிய நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் தமிழ் மக்களை அழித்த வரலாறுகளே அதிகமாக காணப்படுகின்ற நிலையில் தமிழ் கட்சிகள் ரணிலுடன் பேசுவது தமது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும். தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் காலை நக்கி 

அரசியல் பிழைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் பணப்பெட்டி அரசியலை மேற்கொள்வதற்காகவா பேச்சுக்கு சென்றார்கள் என சந்தேகம் எழுகிறது. ஆகவே தமிழ் மக்களை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் கட்சிகள் உறவை மேற்கொள்வது பொது வேட்பாளரை பாதுகாக்கவா அல்லது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கவா என தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.