16 வயதான பாடசாலை மாணவியை 1 வருடத்தில் 7 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 பாடசாலை மாணவர்கள்...

ஆசிரியர் - Editor I
16 வயதான பாடசாலை மாணவியை 1 வருடத்தில் 7 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 பாடசாலை மாணவர்கள்...

மொனராகலை, தணமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களால் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார். சந்தேக நபர்களான 22 மாணவர்களையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த மாணவி சுமார் ஒரு வருட காலமாக 7 முறை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஏனைய ஊழியர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு