SuperTopAds

யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்து பேசிய ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..

ஆசிரியர் - Editor I
யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்து பேசிய ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரிய குளம் நாகவிகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 

நேற்று நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை ஆதீனத்தில் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

இதேவேளை யாழ்.மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, இராணவ கட்டுப்பாட்டிலுள்ள வசாவிளான் பிரதேச விடுவிப்பு, 

இன்டிகோ விமான சேவையை ஆரம்பித்தல், இலங்கை இந்தியாவிற்கான கப்பல் சேவையை ஆரம்பித்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்,தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, 

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.