தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச ராஜபக்ஷ அறிவிப்பு
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச ராஜபக்ஷ அறிவிப்பு
முன்னாள் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்துடன் முன்னிறுத்துவதாக தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் வெள்ளிக்கிழமை (2) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளால் சில கட்சிகள் மக்களின் மனதை அடிக்கடி மாற்றுகின்றன .நாட்டு மக்கள் இன்று புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிக்க விரும்புகின்றனர். அது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாக நடக்க அனுமதிக்கப்பட வேண்டும்.ஊழலை எதிர்த்தவர் அரசியலமைப்பை உருவாக்க உழைத்தவர் ஊழல் மோசடிகளை தடுக்க உழைத்தவர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த பங்காற்றிய ஒருவரையே இம்முறை தேசிய ஜனநாயக முன்னணி முன்வைத்துள்ளோம்.
அத்துடன் இலங்கை முழுவதிலும் உள்ள மாவட்டங்களுக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய பல வர்த்தகர்களை பொதுத் தேர்தலுக்கு முன்வைக்கிறோம்.இந்த நாட்டு மக்களை ஏமாற்றிய ஊழல் அரசியல்வாதிகளை இப்போதே பதவி விலகுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்டின் அப்பாவி மக்களின் உயிர்களை வீணாக பலி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
எமது தேசிய ஜனநாயக முன்னணியின் வளர்ச்சிக்கு இந்த நாட்டை இட்டுச் செல்லும் பணிகள் உள்ளன.நான் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவராக இருந்த போதிலும் நாட்டில் வலதுசாரி அரசியல் செய்யும் திரு.ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவவே நான் நியமிக்கப்பட்டேன்.மேலும், பொதுத் தேர்தலுக்கு பல மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்தவுள்ளதாகவும், ஊழலுக்கு எதிரான அமைச்சர்கள் பலர் தமது கட்சியைச் சுற்றி திரளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.