அனுராதபுரம் வடக்கு பகுதியில் 2.7 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு..
அநுராதபுரம் வடக்கு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை 2.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.அநுராதபுரத்திலிருந்து வடக்காக 41 கிலோமீற்றர் தொலைவில் 2.7 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வுகளை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.