SuperTopAds

சீன அரிசி பொதி வழங்கும் நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களும் பங்கேற்பு...

ஆசிரியர் - Editor I
சீன அரிசி பொதி வழங்கும் நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களும் பங்கேற்பு...

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிகள் யாழ் மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் தினேஷ் குனவர்த்தன யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தார்.

இதன்போதே சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துவைத்தார்.

இதன் போது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 10 மீனவகுடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி வீதம் வழங்கிவைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம்சித்தார்த்தன்,எம்.ஏ.சுமந்திரன்,சி.வி.விக்கினேஸ்வரன், 

அங்கன் இராமநாதன் உள்ளிட்டவர்கள் இணைந்து சீன அரிசிப்பொதிகளை மீனவ மக்களுக்கு வழங்கி வைத்தனர்.